டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 60.54 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், 28 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை மீண்டும் பாஜக கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தன.
இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. delhi assembly election vote