டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த் தேர்தலில், 60.54 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலா 70 தொகுதிகள் தனித்து களமிறங்கின.
பாஜக 68 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்) தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன.
டெல்லியில் ஆட்சியமைக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தநிலையில், தேர்தலுக்கு பின்பு வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தலைநகர் டெல்லியில் அரியணை ஏறப்போவது யார்? என்ற கேள்விக்கு இன்று மதியம் 12 மணிக்குள் விடை கிடைத்துவிடும். டெல்லி தேர்தல் ரிசல்ட்டை இந்திய மக்கள் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி வருகின்றனர். delhi assembly election results