டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Delhi assembly election voting
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா, டெல்லி முதல்வர் அதிஷி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, “டெல்லி தேர்தல் என்பது நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே நடக்கும் போர். ஒருபுறம் வளர்ச்சிக்காக பாடுபடும் எங்களைப் போன்ற படித்தவர்கள் இருக்கிறார்கள். மற்றொருபுறம் குண்டர்கள் இருக்கிறார்கள். மக்கள் குண்டர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டெல்லி காவல்துறை வெளிப்படையாக பாஜகவுக்கு வேலை செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
காலை 9 மணி நிலவரப்படி டெல்லியில் 8.10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும்.