காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (மார்ச் 26) நாடு முழுவதும் காலை 10 மணி முதல் சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
டெல்லி ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி காங்கிரஸ் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து 144 தடை உத்தரவை அமல்படுத்தினர்.
இந்தநிலையில் காவல்துறை தடையை மீறி டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
செல்வம்
பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
சபரிமலை பங்குனி உத்திரம்: இன்று நடை திறப்பு!
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மாணவன்: சடலமாக மீட்பு!