மான நஷ்டவழக்கு: வாபஸ் வாங்கிய எஸ்.பி.வேலுமணியின் நண்பர்!

அரசியல்

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் தொடுத்த மான நஷ்ட வழக்குகளை இன்று (அக்டோபர் 11 ) வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது,எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருக்கு நெருக்கமானவர்களுக்காக விதிகளை தளர்த்தி, பல டெண்டர்களை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

கே.சி.பி இஞ்சினியர்ஸ், வரதன் இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் போன்று அவருக்கு நெருக்கமான நிறுவனங்களின் லாபம், பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், போட்டியே இல்லாமல், அவர்களுக்குள்ளே டெண்டரை எடுத்துக்கொண்டதாகவும்,

ஓராண்டு காலத்தில் விடப்பட்ட 131 டெண்டர்களில் 130 டெண்டர்கள், எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள்தான் ஏலம் எடுத்துள்ளதாகவும் இதன்மூலம் 800 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஜெயராமன் குற்றம்சாட்டியிருந்தார்.

Defamation case s p velumani friend withdrawal arappor iyakkam

இந்த வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி நண்பர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வழக்கை அவர் இன்று (அக்டோபர் 11) வாபஸ் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அறப்போர் இயக்கம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி.பி இஞ்சினியர்ஸ் அவர்களின் நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது,

2018 இல் ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது நெருங்கியவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அறப்போர் இயக்கம் மீது 15 கோடிக்கும் மேற்பட்ட நஷ்ட ஈடு கேட்டு 18 மான நஷ்ட வழக்கு தொடுத்தார்கள்.

அறப்போர் இயக்கத்தை எப்படியாவது ஊழல்களை பற்றி பேசாமல் இருக்க வைக்க வேண்டும் என்று போடப்பட்டது இவ்வழக்குகள்.

ஆனால் அறப்போர் இயக்கம் தொடர்ந்து பலரது ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் பேசி புகார் கொடுத்து வந்தது.

அறப்போரின் புகார் மீது தற்போது வேலுமணி மற்றும் கூட்டாளிகள் மீது FIR பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2021 இல் முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களுக்கு நெருக்கமான KCP மற்றும் சந்திரசேகர் ரூ 3 கோடியே 6 லட்சம் கேட்டு அறப்போர் இயக்கம் மீது தொடுத்த 3 மான நஷ்ட வழக்குகளை வாபஸ் வாங்கி உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றமும் அதை ஒப்புக்கொண்டு அறப்போர் இயக்கம் மீதான 3 மான நஷ்ட வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் தொடர் போராட்டத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் யார் யார்? கிரிஸ் கெயில் கணிப்பு!

கோயில் பெயரில் இணையதளம் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *