”பொதுவிடுமுறை அறிவியுங்கள்” : பன்னீர் கோரிக்கை!

அரசியல்

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜனவரி 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான குடமுழுக்கு நாளை (ஜனவரி 22) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.

ராமர் கோயில் குடமுழுக்கை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கையொட்டி இதுவரை சுமார் உத்தரபிரதேசம், மஹராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் முழுநாள் விடுமுறையும், அசாம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அரைநாள் விடுமுறையும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாட்டில் தடை? : நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு… சேகர்பாபு மறுப்பு!

ஆப்கானில் இந்திய விமானம் விபத்தில் சிக்கியதா? : அமைச்சகம் பதில்!

Video: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரெட் அல்வா… மனசும், வயிறும் குளுந்து போச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *