திமுக சார்பில் டிசம்பர் 16 அன்று தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள், உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் ஆகியவற்றையும் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி, வடசென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார்.
டிசம்பர் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
காஞ்சிபுரம் – பொதுச் செயலாளர் துரைமுருகன்,
கோவை மாநகர் – பொருளாளர் டி.ஆர்.பாலு,
சேலம் மாநகர் – முதன்மை செயலாளர் கே.என்.நேரு
கம்பம் – துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி,
செங்கல்பட்டு – துணை பொதுச் செயலாளர் பொன்முடி
திருத்தணி – துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா
அரக்கோணம் – துணை பொதுச் செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ்
திண்டிவனம் – துணை பொதுச் செயலாளர் கனிமொழி
கரூர் – ஆர்.எஸ்.பாரதி
மேட்டுப்பாளையம் : திருச்சி சிவா
ஆவடி – உதயநிதி ஸ்டாலின்
திருச்சி – டி.கே.எஸ் இளங்கோவன்
அனைகட்டு (வேலூர்) – எ.வ.வேலு
சிவகாசி – திண்டுக்கல் ஐ .லியோனி
விழுப்புரம் : சபாபதி மோகன்
பெரம்பலூர்- சி.வி.எம்.பி. எழிலரசன்
விருதுநகர் : சிவ.வீ.மெய்யநாதன்
பல்லாவரம் – நாஞ்சில் சம்பத்
ராணிப்பேட்டை – தயாநிதிமாறன்
ஜெயங்கொண்டம் – குத்தாலம் பி.கல்யாணம்
அம்பாசமுத்திரம் – ராஜ கண்ணப்பன்ராசிபுரம்
உளுந்தூர்பேட்டை – கு.பிச்சாண்டி
ஆரணி – கோவி-செழியன்
கள்ளக்குறிச்சி – பி.டி.அரசக்குமார்
கும்மிடிப்பூண்டி – வாகை சந்திரசேகர்
திண்டுக்கல் – போஸ் வெங்கட்
இராமநாதபுரம் – வாசு விக்ரம்
கடலூர் – வி.பி.ராஜன்
கிருஷ்ணகிரி- கார்த்திகேய சிவசேனாதிபதி என
தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
பிரியா
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்ஷன்!