முலாயம் சிங் யாதவ் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

அரசியல்

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல் நலக்குறைவால் ஹரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், இன்று(அக்டோபர் 10) காலை உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். “முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த முலாயம் சிங்கின் சாதனைகள் அசாதாரணமானவை” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முலாயம் சிங் யாதவ் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது இரங்கலை பதவிட்டுள்ளார்.

அதில், “மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ்.

தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல்செய்தியில், உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது.

மதச்சார்பற்ற கொள்கைகளில் உறுதியாக இருந்தவர், ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

முலாயங் சிங் யாதவின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலை.ரா

சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி ?

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.