பத்திரிகையாளர் மறைவு: ஆளுநர் இரங்கல்!

அரசியல்

மூத்த பத்திரிகையாளரும், புலனாய்வு செய்திகளுக்கு முன்னோடியுமான  கவிஞர் துரை என்கிற வித்யா சங்கர் நேற்று (ஜனவரி 11) இரவு மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

நக்கீரன் இதழின் முதல் ஆசிரியராக பணியாற்றியவர் துரை. 1988 இல் இருந்து 91 வரை அந்த இதழின் ஆசிரியராக இருந்தார் துரை.  வித்யா சங்கர் என்ற புனை பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.

கோவில்பட்டியை சேர்ந்த துரை அதன் பின்  தனியாக பத்திரிகை தொடங்கியவர் வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார். தற்போது விண் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு  காலமானார். 

இன்று (ஜனவரி 12) தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில்,  “மூத்த பத்திரிக்கையாளர், இலக்கியவாதி துரை பாரதி மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இதே இரங்கல் பதிவை ஆங்கிலத்திலும் ராஜ்பவன் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

வேந்தன்

பொங்கல் விழா கொண்டாடிய தமிழிசை

அயலகத் தமிழர் தரவுத்தளம் உருவாக்கப்படும்” – முதலமைச்சர் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *