dayanidhi maran bank fraud cyber crime experts

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் மோசடி நடந்தது எப்படி?

அரசியல்

திமுக எம்.பி தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி செய்யப்பட்ட விவகாரம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான நம்பகத்தன்மையையும் கேள்விகளையும்  பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

அக்டோபர் 8-ஆம் தேதி திமுக எம்.பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் கூட்டு வங்கி கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த ஆக்சிஸ் வங்கி, “மோசடி செய்யப்பட்ட பணம் தயாநிதி மாறன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தது.

தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள சைபர் கிரைம் நிபுணர் விஜய் சங்கர்,

“ஓடிபி மூலம் ஏமாற்றுவதற்கான பல வழிகள் உள்ளன. எனவே வங்கிகள் தங்கள் சர்வர்களை பாதுகாக்க வேண்டும்.

இதுபோன்ற மோசடிகளுக்கு வங்கிகள் பொறுப்பேற்று சர்வர்களை பாதுகாப்பாக கட்டமைக்க வேண்டிய நேரமிது” என்று தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பின் நிறுவனர் சுந்தர் பால சுப்ரமணியம்,

“வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் வங்கியிலிருந்து பேசுவது போல ஆள்மாறாட்டம் செய்யலாம். அவர்களின் தனிப்பட்ட சில தகவல்களை பயன்படுத்தி நம்பிக்கையாக பேச முயற்சிக்கலாம்.

வாடிக்கையாளர்களிடமிருந்து ஓடிபி, பின் நம்பரை பெற உளவியல் ரீதியான தந்திரங்களையும் அவர்கள் முயற்சிக்கலாம். எனவே பயனர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் கூறும்போது, “சில மோசடி செயலிகள் நம் மொபைலில் இருந்தால் ஓடிபிகளை பயனர் பார்ப்பதற்கு முன்பே அவற்றை படித்துவிட்டு நீக்கலாம். இதன் மூலம் வங்கி கணக்கு வைத்திருப்பவரின் தனிப்பட்ட தரவை ஹேக் செய்து சில நிமிடங்களில் மோசடி செய்யலாம். மாறனின் மனைவி மொபைல் போனில் மோசடி செயலி ஏதேனும் பதிவிறக்கம் செய்திருக்கலாம். வங்கி கணக்கு குறித்த விவரங்களை கேட்ட நபர்கள் அழைத்த போது அந்த செயலியை அவர் கிளிக் செய்திருந்தால் ஓடிபியை உடனடியாக படித்துவிட்டு நீக்கியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

வங்கி மோசடிகளிலிருந்து பாதுகாக்க…

தனிப்பட்ட தகவல்களை அளிக்கும் போது மொபைல் நம்பரை சரிபார்த்து கொள்ளவும்.

வெளிநாட்டு எண்களில் இருந்து வாட்ஸ் அப் கால் வந்தால் அதனை ஏற்க வேண்டாம்.

மோசடி நடந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளவும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் நவராத்திரி கொண்டாட்டம்: அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *