போலி பாஸ்போர்ட்: தேவாசீர்வாதம் வழக்கு ஒத்திவைப்பு!

அரசியல்

மதுரை மாநகர காவல் ஆணையராக  டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது போலி பாஸ்போர்ட் வழங்கியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் வாராகி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுசம்பந்தமான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

மேலும் இந்த விசாரணையை கண்காணிக்கும்படி, எஸ்.பி.சி.ஐ.டி – ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்,

விசாரணையில்  முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பத்திரிகையாளர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

davidson devasirvatham fake passport scam

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி “போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு நற்சான்று வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்

இதையடுத்து, மதுரையில் சம்பவம் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனவும், மதுரைக் கிளை ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நற்சான்று அளித்துள்ளது குறித்தும் மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள், கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜேந்திரன் ஆஜராகி, “மதுரை வரம்புக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையிலும் தாக்கல் செய்ய அனுமதித்து  உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று வாதிட்டார்.

உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

ஆளுநரின் ஆதிக்கம்: அம்பலப்படுத்தும் பொன்முடி

எலான் மஸ்க்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய மார்க்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0