complaint against Seeman

பிரச்சாரத்தில் ஏடாகூட பேச்சு: சீமான் மீது தலித் அமைப்பினர் புகார்!

அரசியல்

சீமான் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவும், SC,ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் வலியுறுத்தி ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசி இருந்தார்.

பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை அவரது பேச்சு இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டனம் எழுந்தது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு, தலித் விடுதலை இயக்கம், ஜெய் பீம், ஆதித்தமிழர் பேரவை, பகுஜன் சமாஜ், விடுதலை வேங்கைகள் கட்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஈடுபட அவருக்கு தடை விதிப்பதுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர்.

இதே போல் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர்.

 சீமான் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் அடுத்த பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

கலை.ரா

“கள ஆய்வில் முதலமைச்சர்” – ஸ்டாலின் போட்ட உத்தரவுகள்!

இடைத்தேர்தலில் முறைகேடு? : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

+1
0
+1
1
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “பிரச்சாரத்தில் ஏடாகூட பேச்சு: சீமான் மீது தலித் அமைப்பினர் புகார்!

  1. கேஸ் நிக்காது.. 😋..
    அண்ணன் மனோ நிலை அப்படி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *