பாமகவுக்கு பட்டியலின சமுதாயம் ஆதரவு தந்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவோம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 15) தெரிவித்துள்ளார்.
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ’எந்த சூழ்நிலையிலிலும் எந்த காலத்திலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஒரு தலித் ஆக முடியாது’ என கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்சிவிரியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம்.
இது வெறும்பேச்சு கிடையாது. எங்களுக்கு முதன்முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த எழில்மலைக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம்.
நாங்கள் 1998ல் தலித் சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999ல் தான் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது.
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். பட்டியலின மக்களுக்கு அதிகமாக செய்தது பாமக தான். அதில் எங்கள் பக்கத்தில் யாருமே வர முடியாது. ” என அன்புமணி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
சூர்யா ஷூட்டிங்கில் அனுமதியின்றி ரஷ்யர்கள், ஆப்கானியர்கள்… வெடிக்கும் சர்ச்சை! – பின்னணி என்ன?