அமைச்சர் நாசருக்கு கொரோனா!

அரசியல்

தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 15) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு 200 இருளர் இன மக்கள் உட்பட 217 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இந்நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்துத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *