இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்: டி.ராஜா மீண்டும் தேர்வு!

அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சோ்ந்த டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த அக்டோபர் 14ம் தேதி தொடங்கிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24வது தேசிய மாநாடு நேற்று (அக்டோபர் 18) நிறைவுபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் சக்திகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது குறித்தும் அக்கட்சிக்கு எதிராக தேசிய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

இவர், கடந்த 2019 ஜூலை மாதம் 21ம் தேதி முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேலும், டி.ராஜா, கே.நாராயணா, அதுல் குமாா் அஞ்சன், அமா்ஜீத் கெளா், கனம் ராஜேந்திரன், பி.கே.காங்கோ, பினோய் விஸ்வம், வல்லப் சென்குப்தா, அஜீஸ் பாஷா, ராமகிருஷ்ண பாண்டா, நாகேந்திரநாத் ஓஜா ஆகியோா் அக்கட்சியின் தேசிய செயலகத்துக்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதுபோல, கட்சியின் செயல் தலைவா்களாக 30 உறுப்பினா்கள், தேசிய குழுவுக்கு 99 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி உண்ணாவிரதம்: காவல் துறை அனுமதி மறுப்பு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *