சைபர் மோசடி : எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுறுத்தல்!

அரசியல்

சைபர் மோசடியில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 27) மனதின் குரல் நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர், ஆடியோ ஒன்றை ஒலிபரப்பினார்.

அது, மோசடியாளர்கள் சாதாரண மக்களை தொடர்பு கொண்டு ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று ஏமாற்றுவது குறித்த ஒரு ஆடியோவாகும்.

இதுகுறித்து பேசிய மோடி, “ டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள்.

அவர்கள் முதலில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று.

இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள்.

பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம். “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள்.

இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”.

எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளிவாக இருங்கள்.

சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள்” என எச்சரிக்கையாக இருக்க சொல்லி அறிவுறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

“ஒவ்வொரு டெஸ்டிலும் சென்ட்டம்”… உதயநிதியைப் பாராட்டிய ஸ்டாலின்

‘என்ன கட்ஸ் சார்’ – ‘நந்தன்’ பட இயக்குநருக்கு நடிகர் ரஜினியிடம் இருந்து வந்த திடீர் போன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *