நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் நேற்று இரவு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுக கூட்டணிக்கு வர பாமகவுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. கூட்டணி அமைத்தே பாமக தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்தசூழலில் ராமதாஸ், சி.வி.சண்முகம் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பாஜக அல்லாத அதிமுக தலையிலான கூட்டணி அமைக்க கட்சி ரீதி்யாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கூட்டணி குறித்தான இறுதி முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் யாரும் எங்களுக்கு அரசியல் ரீதியாக எதிரி இல்லை.
கூட்டணிக்கான உகந்த சூழல் மாறி வரும் நிலையில், எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல் பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகம் வருகை!