கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்!

Published On:

| By Aara

கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். 

கடந்த   ஜனவரி 19ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பொதுவான விஷயங்களை பேசி வரும்போது கடலூர் மாவட்டத்தை குறிப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்தார்.

‘தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் அடிதடி வழக்குகள், திருட்டுகள், ஆதாய கொலைகள், தீ வைப்பு சம்பவங்கள்  அதிகமாக நடந்துள்ளன. அனைத்தும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

எஸ் பி யின் பணி மெச்சத் தகுந்தபடி இல்லை” என்று சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரான மு.க ஸ்டாலினை பேசினார்.

இது பற்றி ஜனவரி 25ஆம் தேதி மின்னம்பலம் இதழில்,   சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அந்த செய்தியில் சட்டம் ஒழுங்கு என்பது தமிழ்நாட்டின் முக்கிய விவாத பொருளாகி இருக்கிற நிலையில் கடலூர் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பற்றி ஆய்வுக் கூட்டத்திலேயே முதலமைச்சர் அதிருப்தி தெரிவித்தும் அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,

ஆய்வு கூட்டத்தில் வெளிப்பட்ட முதல்வரின் எச்சரிக்கை வார்த்தைகள் காற்றோடு போய்விட்டனவா?” என்ற கேள்விகள் காவல்துறை வட்டாரத்திலேயே எழுவதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இந்த நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி தமிழ்நாடு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி  வெளியிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டியலில் கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் பெயர் இடம் பெற்றுள்ளது.

கடலூர் மாவட்ட எஸ்பி ஆக இருந்த சக்தி கணேசன் அந்தப் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு சிலை தடுப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் எஸ்பியாக சென்னை மாநகர போலீசில் கொளத்தூர்  துணை ஆணையராக இருந்த ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Cuddalore SP Shakti Ganesan

மேலும், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன், மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாகவும். சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி, ராணிப்பேட்டை எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம், கடலூர் எஸ்.பி.யாகவும். கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன், சிலை கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு எஸ்.பி.யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி பிரியா, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வணங்காமுடி

பிபிசி ஆவணப்படத்திற்கு தடை : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel