கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (பிப்ரவரி 28) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யா. அவரது கணவர் பன்னீர் செல்வம், பண்ருட்டி நகராட்சி தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த காலகட்டத்தில் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை டெண்டர் விட்டதில் ரூ.20 லட்சம் பன்னீர் செல்வம் பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, பண்ருட்டியில் பன்னீர் செல்வத்திற்கு தொடர்புடைய 4 இடங்களிலும், சென்னையில் அப்போதைய பண்ருட்டி நகராட்சி கமிஷனராக இருந்த பெருமாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உங்கள் மூளையை உற்சாகமாக வைத்திருக்க… இதோ ஈஸி வழிகள்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்!
பதஞ்சலி விளம்பரங்கள்: அரசு கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? – உச்சநீதிமன்றம்