“திமுக ஆட்சியில் அதிகாரிகளால் வேலையே செய்ய முடியவில்லை” என கடலூர் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில், இன்று (அக்டோபர் 12) ’முதல்வர் அறிவித்த உங்கள் தொகுதியின் 10 கோரிக்கைகள்’ குறித்த விவாதம் நடைபெற்றது.
இதில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கடலூர் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், ”கடலூர் மாநகராட்சி கமிஷனர் (நவேந்திரன்) கமிஷன் வாங்கும் வேலையைத்தான் பார்க்கிறார்” எனப் பேசியிருந்தது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியில் வந்த கமிஷனர் நவேந்திரனிடம், ”எதற்காக எம்எல்ஏ இப்படி ஓப்பனாக பேசினார்” என்று கேட்டோம்.
“நீங்கள் யார், எந்த பத்திரிகை ரிப்போர்ட்டர்” என கேட்டவரிடம், ”மின்னம்பலம்.காம் மொபைல் தினசரி பத்திரிகை” என்று அறிமுகம் செய்துகொண்டு பேசினோம்.
தொகுதி நிதியில் நடந்த வேலை முடிந்ததும் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ. என்னைக் கூப்பிட்டார்.
அப்போது நான் சென்னையில் இருந்ததால், எம்எல்ஏ கலந்துகொண்ட அந்த விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
கடலூர் புதுநகர் மற்றும் முதுநகர் பகுதியில் மூன்று மீன் மார்க்கெட்கள் உள்ளன. அந்த மீன் மார்க்கெட் கட்டடங்கள் பழையவை என்பதால் புதிதாக கட்ட சுமார் 15 கோடி மதிப்பில் ப்ரொபோசல் அனுப்பி வைத்திருக்கிறோம். நிர்வாக நடைமுறைப்படி அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். அதற்குள் நான் செய்யவில்லை என்று அவர் நினைக்கிறார்.
மேலும் இந்த ஊரில் உட்கட்சி கோஷ்டியால் அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. அதிகபட்சம் ஆறு மாதத்திற்கு மேல் வேலை செய்யமுடியாது. எனக்கு ட்ரான்ஸ்பர் இப்போதே போட்டாலும் இந்த ஊரைவிட்டுப் போய்விடுவேன்” என மன வேதனையோடு பேசியவர்,
”இந்த கவர்மென்டில் அதிகாரிகளால் வேலை செய்ய முடியவில்லை” என்றார்.
எம்எல்ஏ ஐய்யப்பன் உதவியாளரிடம் கேட்டோம், ”கமிஷனர், எம்எல்ஏ சொல்வதை கேட்பதில்லை; மதிப்பதில்லை” என்றார்.
ஒவ்வொரு ஊரிலும் இரண்டு கோஷ்டி, இரண்டு நாட்டாமைகள் இந்த ஆட்சியில் இருப்பதால், அதிகாரிகள் நாங்கள் மத்தாளமாக இரண்டு பக்கமும் அடி வாங்கி வருகிறோம் என்று புலம்பினார்கள்.
வணங்காமுடி
கமிஷன் வாங்கும் கமிஷனர்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!
மியான்மர் வேலை மோசடி: இருவர் கைது!
அரசு அதிகாரரையும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரையும் நம்ப கூடாதுவ், பொது மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். mla, வை கண்காணிக்க சிறப்பு குழு அமையுங்க