தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 11)பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் பேசிய பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவர் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறவில்லை.. தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து லாபம் அடைகின்றனர்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஹெட்லைன்ஸ் வேணுமா… உண்மையா?: கோபப்பட்ட அஷ்வின்
யாத்திசை…பொன்னியின் செல்வனுக்கு போட்டியா? இயக்குனர் பதில்!