முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாஜகவில் புதிய பதவி!

அரசியல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கௌரவ துணைத் தலைவராக இன்று(ஜூன் 1) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்களும், 26 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 64 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றியது இவரது சிறந்த ஆட்டமாகும்.

இவர் கடைசியாக 1987 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.

ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 

இந்நிலையில், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கௌரவ துணைத் தலைவராக இன்று(ஜூன் 1) நியமிக்கப்பட்டுள்ளார்.


மு.வா.ஜெகதீஸ் குமார்

அமமுக செயற்குழு கூட்டம் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

”முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது” : அமைச்சர் அன்பில் மகேஷ்

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *