மத்திய பட்ஜெட்… சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு!

Published On:

| By Selvam

2025 – 2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். cpm protest against central

இந்தநிலையில், மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளார். cpm protest against central

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை ஏற்றியுள்ளது மத்திய அரசு.

இந்த நாசக்கார பட்ஜெட்டை எதிர்த்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்த மத்திய பாஜக அரசினை கண்டித்தும் பிப்ரவரி 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். cpm protest against central

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், அனைத்துப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel