மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் பெ.சண்முகம்… ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

Published On:

| By Selvam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று மார்க்சிஸ்ட் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் பெ.சண்முகத்திற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை திமுக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரியவர் சண்முகம் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், திமுக கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த கே.பாலகிருஷ்ணன் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இருவரும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சண்முகம் மலைவாழ் பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உழைத்ததற்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர். அவரின் பணி சிறக்கட்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ.சண்முகம் பணி சிறக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். தனது இளம் பருவம் முதல் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட பெ.சண்முகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்.

விவசாயிகளின் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாகப் போராடி வருபவர். இந்தியா கூட்டணியின் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் செயல்படவல்ல ஒரு சிறந்த தோழருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? – அப்டேட் குமாரு

2025-ன் முதல் சட்டமன்றம்… ஆளுநர் அண்ட் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share