நாகை, திருப்பூர் தொகுதிகளுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல, இந்த முறையும் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னை தியாராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அகில இந்திய செயலாளர் நாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணா, “நாகப்பட்டினம் தொகுதியில் திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், திருப்பூர் தொகுதியில் தற்போதைய எம்.பி சுப்பராயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்புமணிக்கு திடீர் ஆஃபர்: பாஜகவின் இறுதி முயற்சி!
WPL 2024: அடித்து நொறுக்கப்பட்ட 5 சாதனைகள்… யாரெல்லாம் சம்பவம் செஞ்சு இருக்காங்கன்னு பாருங்க!