cpi mutharasan urges tiruvannamalai farmers cases revoke

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்க: முத்தரசன்

அரசியல்

செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று (நவம்பர் 23) வலியுறுத்தியுள்ளார். CPI mutharasan urges tiruvannamalai farmers cases revoke

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-ஆவது அலகு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அதில் 7 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது.

பின்னர் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு விலக்கிக்கொண்டது. சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 19 விவசாயிகள் வேலூர் சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.

cpi mutharasan urges tiruvannamalai farmers cases revoke

இந்தநிலையில், செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதி மேல்மா உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகள் அரசின் நில எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அரசு நில எடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்.

அந்தப் போராட்டம் அமைதியாக நீடித்து வந்த நிலையில் தொடர்புடைய அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், விவசாயிகள் உணர்வுகளை உள்வாங்கி பிரச்சினைக்கு தீர்வு காண தவறியதால் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி தீவிரமானது.

தீவிரமான போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற முறையில் போராடிய விவசாயிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் 11 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

cpi mutharasan urges tiruvannamalai farmers cases revoke

இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்த ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அதற்கான உத்தரவுகளை சிறையில் இருந்தவர்களிடம் வழங்கிய செய்தி, போராடி வந்த விவசாயிகளை ஆத்திரமூட்டியது. போராட்டத்தை மேலும் விரிவான பகுதிக்கு நெட்டித் தள்ளியது.

இந்தச் சூழலில் சிறையில் இருந்து வரும் விவசாயிகளின் குடும்பத்தினர் முறையிட்டனர் என்ற பெயரில் அரசு கடுமையான நிபந்தனைகள் விதித்து ஆறு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. CPI mutharasan urges tiruvannamalai farmers cases revoke

அதே சமயம், போராட்டத்தை ஒருங்கிணைத்து, வழி நடத்தி வரும் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்கிறது. இது தவிர விவசாயிகள் மீதான வழக்குகளும் தொடர்கின்றன.

அரசின் நடவடிக்கை செய்யாறு பகுதியில் அமைதி திரும்ப உதவவில்லை என்பதை அரசு கவனத்துக்கு தெரிவித்து, விவசாயிகள் மீதான மேல்மா சிப்காட் நில எடுப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மேலும், சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து, நில எடுப்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை எட்டிய மீட்பு பணிகள்!

ஜப்பானிய காடை வளர்ப்பு: இலவசப் பயிற்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *