ஜார்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று நியமித்தார்.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது,”தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் ஒரு ஆளுநர் பதவியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அளித்திருப்பது தமிழினத்தின் மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவர்கள் அன்பும் பாசமும் மரியாதையும் பெருமையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் ஆகும்.
மாநிலத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே ஒரு பாலமாக இருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னை வந்த ஷாருக்: வழியனுப்பிய நயன்
ஏடிஎம் இயந்திரத்தை தீயிட்டு கொளுத்திய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை!