பாஜக பொறுப்பில் இருந்து விலகுவதாக சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
புதிதாக 6 ஆளுநர்களை நியமித்தும், 7 ஆளுநர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இதில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக, தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி. ராதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களான இல. கணேசன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பிப்ரவரி 12 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15) காலை கமலாலயத்திற்கு வந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அங்கு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மோனிஷா
“4 ரவுண்டு சுட்டதில் 3 ரவுண்டு குண்டு பாய்ந்தது” – கோவை ஆணையர் பேட்டி