தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று 13 ஆளுநர்களை நியமித்துள்ளார்.
அதன்படி, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா சிக்கிம் மாநில ஆளுநராகவும், கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்னாயக் அருணாச்சல பிரதேச ஆளுநராகவும், பிரதாப் சுக்லா இமாச்சல் பிரதேச ஆளுநராகவும், குலாப் சந்த் கட்டாரியா அசாம் மாநில ஆளுநராகவும், ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்ஜண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜகவைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சுஸ்ஸ்ரீ மணிப்பூர் ஆளுநர் ஆகிறார்.
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமனம்.
பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான், மேகலாயா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
இமாச்சல் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பீகார் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வம்