கோவை மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரியை ஆறு சதவிகிதமாக உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா, பிரபாகரன், ரமேஷ் ஆகிய மூவரும் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்திற்கு வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கோஷமிட்ட அதிமுக கவுன்சிலர்கள், வெளிநடப்பு செய்தனர்.
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாநகராட்சி மன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய மேயர் ரங்கநாயகி, ‘இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓவர் வெயிட்… பிரித்வி ஷா ரஞ்சி போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்!
வைத்திலிங்கம் வழக்கு… சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!