மத்திய அரசுக்கு 3 முக்கிய கோரிக்கை முன்வைத்த முதல்வர்

அரசியல்

சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 25) பேசினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் இன்று நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், மதுரை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி வடமலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, PTR பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் கலோன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சட்ட நீதியும்,சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “106 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 44 புதிய நீதிமன்றம் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் சமூக நீதியுடன் நீதிபதி நியமனம் செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை மத்திய அமைச்சகத்திற்கு இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இராமலிங்கம்

‘என்4’ விமர்சனம்: இடைவேளையில் தொடங்கும் படம்!

IPL 2023: காயத்தால் விலகிய நட்சத்திர வீரர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *