புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதில் காரில் இருந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணசாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கொலை முயற்சி தொடர்பாக 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பினை அளித்தது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் ஏற்கெனவே இறந்த நிலையில், சிவா என்கிற சிவலிங்கம், தங்கவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மேலும் மற்ற 9 பேரை நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் சேதுபதி – கத்ரீனா பட ரீலீஸ் தேதி மாற்றம்..!
சமையல் சிலிண்டர் விலை மேலும் குறைப்பு!