நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடினீர்களா என்று சேகர் ரெட்டி மீதான வழக்கில் வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2014-2018 ஆண்டு காலக்கட்டத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் ரூ. 4,442 கோடி ஈட்டியதாகவும் அதற்கு வரியாக ரூ. 2,682 கோடி செலுத்தவேண்டும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து சேகர் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை முறையாக சாட்சிகள் விசாரணை நடத்தவில்லை என்றும் போதுமான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்றும் கூறிய நீதிமன்றம் 2014-2018 ஆண்டு வரை சேகர்ரெட்டியின் நிறுவனம் வருமான வரியாக ரூ. 2,682 கோடி செலுத்தவேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது.
மேலும் வருமான வரிக்கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் வருமான வரித்துறை கண்ணாமூச்சி ஆடியுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கலை.ரா
போர்வெல் பம்புடன் சேர்த்து போடப்பட்ட கால்வாய் : ஒப்பந்ததாரர் கைது!