வாக்கு எண்ணிக்கை: ஹனுமன் கோயிலில் பசவராஜ் பொம்மை தரிசனம்!

Published On:

| By Kavi

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (மே 11) ஹனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள ஹனுமன் கோயிலில் காலை சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர், “மக்கள் தீர்ப்பு வழங்கும் இன்றைய நாள் மிக முக்கியமான நாள். நிச்சயம் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

கர்நாடக வாக்கு எண்ணிக்கை: யார் முன்னிலை?

’எப்படி போட்டாலும் சிக்ஸர்’: சூர்யகுமாரை கண்டு மிரண்ட ரஷீத்கான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel