கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.
நேற்று முன் தினம் அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிலையில் நேற்று இரவு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில் தற்போது காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பெண்களும் அடங்குவர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – ஸ்டாலின் ஆலோசனை!
இந்த கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டவர்களும், காவல்துறை டிஜிபி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவை இன்று கூட உள்ள நிலையில் தற்போது கள்ளச்சாராயம் விவகாரம் தமிழக அரசியலில் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: அக்குள் பகுதியில் கரும்படலம்… ஆயின்மென்ட் உதவுமா?
டாப் 10 நியூஸ் : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் இந்தியா – ஆப்கான் போட்டி வரை!
Comments are closed.