கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர், மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , வரும் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(மே18) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி?
கள்ள சாராயம் காய்ச்ச சொன்னதே எதிர்க்கட்சிகள் என்று உளவு துறை சொல்லும் போது ஆர்ப்பாட்டம் தேவையா?