முதல்வர், முன்னாள் முதல்வருக்கு கொரோனா!

அரசியல் இந்தியா

ராஜஸ்தான் முதல்வருக்கும், முன்னாள் முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான வசுந்தரா ராஜேவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வசுந்தரா ராஜே தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

வசுந்தரா ராஜே பிற்பகல் 3.45 மணிக்கு இந்த பதிவை வெளியிட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே அசோக் கெலாட்டும் தனக்கும் தொற்று பாதிப்பு இருப்பதாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. லேசான தொற்று அறிகுறிகளுடன் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் கோவிட் தொற்று விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை தகவல்படி நாடு முழுவதும் 21,179 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5,30,901 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: ’கெத்து’ காட்டிய எடப்பாடியின் கூட்டங்கள் ரத்து பின்னணி!

திறமைக்கு வயது தடையா?: யார் இந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *