அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியால் கூட்டப்பட்ட பொதுக்குழு கட்சி விதிகளுக்கு புறம்பானது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 30) நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணமுராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜராகினார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை, 2026 ஆம் ஆண்டு வரை அந்த பதவிக்காலம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கிக் கொண்டார்கள்.
எனவே இந்த பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அவர் வாதிட்டார்.
மேலும் கடைசி வரை கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னை வெளியே தள்ளிவிட்டு முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளதாகவும் ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கலை.ரா
ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் பார்த்த த்ரிஷா