கூட்டுறவு சங்க திருத்த மசோதா: திரும்பப் பெற்றது தமிழக அரசு!

அரசியல்

கூட்டுறவு சங்க மசோதாவை திரும்பப் பெறுவதாகக் கூறி தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், கண்காணிப்பை  அதிகரிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டது.

மேலும் விதிகளை திருத்தி, நிர்வாகிகள் பதவி காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆளுநர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், ஏன் 3 ஆண்டுகளாக குறைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்தநிலையில் அந்த மசோதாவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தமிழக சட்டத்துறை அமைச்சகம் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

கலை.ரா

பிஎப் 7 கொரோனா – தமிழகத்தின் நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

துல்கர் சல்மான் கார் ஓட்டுர் மர்ம மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0