வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் சீமானும் சாட்டை துரைமுருகனும் பேசி வருகிறார்கள்.
இவர்களின் கருத்துக்கள் ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும்.
சாட்டை துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கிறான்.
நமது பெண்களை கையை பிடித்து இழுப்பான் என்றும் வடமாநில தொழிலாளர்களை பார்த்தாலே கோபம் வரும் அளவிற்கு இனவெறி கருத்துக்களை பேசி உள்ளார்.
அதேபோல கடந்த 15ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் வடமாநில தொழிலாளி கஞ்சா வச்சிருக்கான் பெண்களை கையை பிடித்து இழுப்பான்.
உள்ளே தூக்கி போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளுத்து விடுவேன். அவனே பெட்டியை தூக்கிட்டு ஓடிவிடுவான் என்று விஷமத்தனமான இனவெறி கருத்துக்களை பேசி உள்ளார்.
இது போன்ற கருத்துக்கள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே. இதனால் சமூகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சீமான் மீதும் சாட்டை துரைமுருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
கலை.ரா
மின் இணைப்புடன் ஆதார் எண்: களமிறங்கிய மோசடி கும்பல் – உஷார் மக்களே உஷார்!