டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட பா. ஜ. க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.
தமிழகத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் ஆர். என். ரவி பேசிவரும் பல கருத்துகள் மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே உள்ளன.
தமிழ்நாட்டின் இயல்புக்கு மாறாக அவர் பேசிவருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை, பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுவைத்திருக்கும் ஆளுநர் ரவியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று (ஜனவரி 9 ) தொடங்கியது.
இதில், 3 வது பத்தியில் இடம்பெற்றிருந்த “திராவிட மாடல்” என்னும் வார்த்தையை ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்கவில்லை.
அதே போல் தமிழகத்தின் முக்கிய தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கரின் பெயரையும் உச்சரிக்க மறுத்த ஆளுநர் ஆர். என். ரவி தேசியகீதம் இசைக்கப்படும் முன்பு சட்டபேரவையை விட்டு வேகமாக வெளியேறினார்.
கேரளாவும் இதுபோன்ற சம்பவங்களை மூன்று முறை கண்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு கேரளமாநிலத்தின் அப்போதைய கவர்னராக இருந்த வி.விஸ்வநாதன் மத்திய அரசின் விமர்சனக் குறிப்புகளைப் படிக்க மறுத்துவிட்டார்.
அப்போது முதல்வராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுந்து, கவர்னர் படிக்க மறுத்த பகுதியை குறிப்பிட்டு காட்டி பின்னர், ஆளுநர் அந்தப் பகுதியைப் படிக்க மாட்டேன் என்று ஏற்கனவே தன்னிடம் கூறியதாக பதிலளித்தார்.
இது அப்போது அங்கு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் இரண்டு நிகழ்வுகள் அதே கேரளாவில் நடைபெற்றது. ஒன்று 2001 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் காங் கவர்னராக இருந்த போது( (காங்கிரஸின் ஏ.கே. ஆண்டனி முதல்வர்), மற்றொன்று 2018-ல் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சதாசிவம் கேரள கவர்னராக இருந்த போது (சிபிஐ-எம்-ன் பினராயி விஜயன் முதல்வர்).
மேற்கு வங்கத்தில் 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய அப்போதைய ஆளுநர் தர்ம வீரா தனது உரையில் சில பத்திகளைத் தவிர்த்துவிட்டார்.
2017 ஆம் ஆண்டு திரிபுரா ஆளுநராக இருந்த ததாகதா ராயும் இதுபோன்று உரையின் சில பகுதிகளை படிக்க மறுத்துவிட்டார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணிக் சர்க்கார் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுவிஸ் வங்கி கறுப்புப் பண விவகாரம்: பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஜெயலலிதா எப்படி சென்னா ரெட்டியை அடக்கி வைத்தாரோ அதே போன்று ஆரியன் ரவியை கவனிக்க வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்க படாத ஒரு நபருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்… மக்கள் மசோதாவை கிடைப்பில் போட்டு விட்டு சனாதன பற்றி பேசுகிறான்