அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்கால மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கொங்குமண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க பாஜக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் 400 பாஜக எம்.பி.க்கள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் இந்தியாவில் நதிநீர் இணைப்பை நமது அரசு எளிதாக செயல்படுத்தலாம். பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும்.
அரசியல் கட்சிகளுடன் சண்டையிடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எதிர்கால மாற்றத்திற்காக நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எம்.பி. பதவி என்பது முள் மெத்தை போன்றது. பிரதமர் அனைத்து எம்.பி.க்களையும் வேலை வாங்குவார். அவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
தமிழக பாஜக தலைவராகிய நானே களத்திற்கு வரவேண்டிய கட்டாயமும், நிர்ப்பந்தமும் தற்போது ஏற்பட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரையும் அரசியல் களத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
நான் அரசியலில் விடுமுறை எடுத்ததே கிடையாது. என் மண் என் மக்கள் யாத்திரை ஆரம்பித்ததில் இருந்து கடந்த 8 மாதங்களாக எனக்கு விடுப்பே கிடையாது. என் அம்மாவை பார்த்தே 2 மாதங்கள் ஆகிவிட்டது.
இப்பொழுது நம் நாட்டில் மாற்றம் நடக்கவில்லை என்றால், இனி எப்போதும் நடக்காது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Heatwave: தமிழ்நாட்டில் அதிகம் ‘வெயில்’ அடிக்கும் மாவட்டம் இதுதான்!
Comments are closed.