மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று மநீம ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த கமல்ஹாசனுக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அடுத்த ஆண்டே நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் மநீம 3.7 சதவிகித வாக்குகளை பெற்றது.
அடுத்ததாக 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. இதில் கோவையில் இருந்து கமல்ஹாசன் போட்டியிட்டார்.
கோவையிலேயே தங்கி பிரச்சாரம் செய்தார். ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் தோல்வியுற்றார்.
2021 தேர்தலில் மநீம வாக்கு சதவிகிதம் 2.5 சதவிகிதமாக குறைந்தது.
இதைதொடர்ந்து அரசியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த கமல் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 22), கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மநீம பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், “கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிட தயாராக இருக்கிறேன். கட்சி நிர்வாகிகளும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விக்ரம் படத்துக்கு கூட்டம் சேர்கிறது. மக்கள் நீதி மய்யத்துக்கு சேராதா என்ன?
இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். முன்னதாகவே கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார் என கமல் பேசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த கூட்டத்தில், யாருடன் கூட்டணி அமைப்பது மக்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. அதை எப்படி சரி செய்வது ஆகியவை குறித்தும் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரியா
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்?
எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக