2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாக இருந்துகொண்டிருக்கிறது. இந்த தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளன.
2026 தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் விஜய்.
இப்போதே, 2026 தேர்தல் பணிகளை தவெக நிர்வாகிகள் தொடங்கியிருக்கின்றனர்.
இந்தசூழலில் நடிகர் விஷாலும் 2026 தேர்தலில் போட்டியிடலாம் என்று கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தால் நிச்சயம் சறுக்கல் தான்” என்றார்.
நீங்கள் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியில் இணைவீர்கள்… அல்லது விஜய் போல தனிக்கட்சி ஆரம்பித்து வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், “மக்களுக்கு போதுமான வசதிகள் தற்போது இல்லை. அதை ஏற்படுத்தி தரவே நான் அரசியலுக்கு வருகிறேன்.
எந்த கட்சி என்று பிறகு சொல்கிறேன். நல்லவேளை விஜயகாந்த் போல எனக்கு மண்டபம் இல்லை. ஒருவேளை நான் எப்போது வருகிறேன் என்று சொன்னேன் என்றால், அந்த மண்டபத்தை இடித்து தள்ளியதை போல இதையும் இடித்து தள்ளியிருப்பார்கள். நேரம் வரும் போது சொல்கிறேன்” என்றார்.
2026 தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “தனியாக வந்து முதலில் நான் யார் என்று காட்டவேண்டும். 2026 வேட்பாளர் பட்டியலில் கண்டிப்பாக என் பெயர் இருக்கும்” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?
மாறும் அரசியல் களம்…கருத்துக்கணிப்பில் வந்த மாற்றம்…பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா?
இவனுக்கு வேற வேலை இல்லியோ