பிரதமராக மோடி பதவியேற்றதும் இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையில் பலத்த மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடர்பாக கூட இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற வரலாற்றையும் மோடி நிகழ்த்தினார். அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு மோடியை கட்டித் தழுவி வரவேற்றார்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 22) அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வை ஒட்டி பல்வேறு வெளிநாட்டு தூதர்களும் பங்கேற்றுள்ளனர். அதில் இஸ்ரேல் நாட்டு தூதரும் பங்கேற்றுள்ளார்.
அயோத்தி மட்டுமல்லாமல் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் இன்று ராமர் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மும்பையில் வதாலா ராமர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில், மத்திய மேற்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோபி ஷோஷானி பங்கேற்றார். ராமரை வழிபட்ட இஸ்ரேல் தூதர் அங்கிருந்த கோயில் மணியை அசைத்து ஒலியெழுப்பச் செய்தார்.
#WATCH | Consul General of Israel to Midwest India, Mumbai, Kobbi Shoshani visits Wadala Ram Mandir in Mumbai. pic.twitter.com/2WygcTC0Xk
— ANI (@ANI) January 22, 2024
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் தூதர் கோபி ஷோஷானி, “இன்று மும்பை வாதாலா ராமர் கோயிலுக்கு சென்றேன். விரைவில் அயோத்தி செல்ல ஆர்வமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல வெளிநாட்டு தூதர்கள் ஆங்காங்கே ராமர் பூஜைகளில் பங்கேற்று வருகிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…