தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த இரண்டு தனித்தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கேள்வி, நேர பதிலுக்கு பிறகு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்று இரண்டு அரசினர் தனித்தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனையடுத்து தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது.
இதனையடுத்து இரண்டு தீர்மானங்கள் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்காததால், இரண்டு தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அவங்கள காதலிக்கிறேன்” கமெண்ட் அடித்த இந்தியர்… கம்மின்ஸின் ‘ரிப்ளை’ இதுதான்!
விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!