“கார்கேவை கொல்ல சதி”: காங்கிரஸ் குற்றசாட்டு!

அரசியல் இந்தியா

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கல்புராகி மாவட்டம், சித்தாபூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக நிர்வாகி ரவி ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் என ஒரு ஆடியோ கிளிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடகா பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று (மே 6) வெளியிட்டார்.
கன்னடத்தில் பேசியுள்ள அந்த ஆடியோ கிளிப் குறித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ”மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் இப்போது சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.
இது, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பொம்மையின் நீலக்கண்ணான சித்தாப்பூர் பாஜக வேட்பாளரின் பேச்சில் இருந்து தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆடியோ கிளிப்பில், கார்கே முகாமைச் சேர்ந்த ஒருவரின் தொலைபேசி எண்ணை ரவி கேட்கிறார், “கார்கே தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். தொலைபேசி எண் மட்டும் என்னிடம் இருந்தால், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தை முடித்துவிடுவேன்” என்று ரவி கூறுவது போன்றும் அதற்கு ரத்தோடு தன்னிடம் தொலைபேசி எண் இல்லை என்று கூறுவது போன்றும் பதிவாகியுள்ளது.
காங்கிரஸின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிரியா

ஓ.பன்னீர்செல்வம் சபரீசன் திடீர் சந்திப்பு!

தி கேரளா ஸ்டோரி அமைதியை சீர்குலைத்து விடும்’: திருமாவளவன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *