ராகுல் வீட்டில் போலீஸ்: அதானி விவகாரத்தை திசை திருப்பவா?

அரசியல்

ராகுல் காந்தி வீட்டில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற போலீஸ் விசாரணை அதானி குறித்த கேள்வியால் மோடி திகைத்திருப்பதை நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி காஷ்மீர் ஸ்ரீநகரில் பாரத் ஜோடா யாத்திரையின் போது, “யூனியன் பிரதேசங்களில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இது குறித்து பேச பல பெண்கள் என்னை அணுகியிருந்தனர்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இது தொடர்பாகத் தகவல்களைப் பெறுவதற்காக டெல்லி போலீஸ் மார்ச் 15 ஆம் தேதி ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் ராகுல் காந்தியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது டெல்லி போலீஸ்.

அந்த நோட்டீஸில், “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதனால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் நோட்டீஸிற்கு ராகுல் காந்தி பதில் அளிக்காததால் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று இன்று (மார்ச் 19) காலை டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், அதானி குறித்த கேள்விகளை திசைதிருப்புவதற்காக இது போன்ற செயல்கள் நடப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில், “பாரத் ஜோடா யாத்திரையும் ராகுல் காந்தியும் லட்சக்கணக்கான பெண்கள் சுதந்திரமாக நடக்கவும் தங்கள் கவலைகளைக் கூறவும் அவர்களின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பான இடத்தை அளித்தனர்.

ஆனால் டெல்லி காவல்துறையின் மலிவான நாடகங்கள், அதானி பற்றிய நமது கேள்விகளால் மோடி எவ்வளவு திகைத்திருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.
இது போன்ற செயல்பாடுகள் பதில்களைத் தேடுவதற்கான நமது நம்பிக்கையை ஆழமாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

மோனிஷா

கப்ஜா – நெளியவிட்டிருக்கும் ‘கப்சா’: விமர்சனம்!

“கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது”: எடப்பாடி தரப்பு வாதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.