ஆகஸ்ட் 28-ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு!
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.
இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். அதன்பிறகும் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது.
இதனால் கட்சியை வலுப்படுத்த ஒரு புதிய தலைவர் தேவை என்று மூத்த நிர்வாகிகள் சோனியா காந்தியிடமே நேரடியாக தெரிவித்தனர்.
மேலும் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவரை தலைவராக்கவேண்டும் என்பதும் பலரது விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தல், ஆகஸ்டு 21ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று காரிய கமிட்டி அறிவித்து இருந்தது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய அக்கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் டெல்லியில் 28 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு கூடுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்க இந்த செயற்குழு கூட்டம் கூடுகிறது.
அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கலை.ரா
குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் எம்.பி.!