இந்திய நாட்டை ஆள்வதற்காக சர்வாதிகாரம் துடித்துக் கொண்டி இருக்கிறது. அந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் வெற்றி பெறும் என இன்று (மார்ச் 29) தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தயாரித்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை இன்று வெளியிட்டார் செல்வப்பெருந்தகை.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “இந்திய நாட்டை ஆள்வதற்கு சர்வாதிகாரம் துடித்துக் கொண்டு இருக்கிறது.
அந்த சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு காங்கிரஸ் பேரியக்கம் இந்த தேர்தலை சந்திக்கும். வெற்றியும் பெரும்.
முதல் முறையாக ஜனநாயகத்திற்கு உட்பட்ட அரசியல் கட்சிகளை முடக்கும் வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.
அதன் உச்சபட்சமாக, தங்களுடைய வங்கி கணக்கை முடக்கினால், கணக்குகளில் உள்ள பணத்தை திருடினால் காங்கிரஸ் பேரியக்கம் நகராது, எந்த மூலைக்கும் செல்ல முடியாது என்று எண்ணி இந்த செயலை செய்துள்ளனர்.
அதனையும் மீறி மக்களின் ஆதரவோடு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் பேரியக்கம் மக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் உரையாற்றி வருகிறார்கள்.
எல்லாவற்றையும் திருடுவது பாஜக தான்!
தற்போது, வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எதற்காக தேர்தல் நேரத்தில், இவ்வாறு செய்கிறார்கள் என்று நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி என்பதை அவர்களே தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி வருமான வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கலாம் என்கிறது வருமான வரித்துறையின் விதி.
கள்ளப்பணம், கருப்பு பணம், திருட்டு பணம் என எல்லாவற்றையும் தேர்தல் பத்திரம் மூலம் திருடுவது பாஜக தான்.
ஆகவே, இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை அடையப்போகிறது.
ராகுல் காந்தி சொன்னதுபோல, பாஜகவை மட்டும் வீழ்த்தினால் போதாது. ஒரு பாசிச இயக்கமாக பாஜக பின்னால் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.யை ஒழிக்க வேண்டும்.
வேண்டுமென்ற அண்ணாமலை செய்துள்ளார்!
எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஏமாற்று வேலையை செய்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை நீதிமன்ற முத்திரை பத்திரத்தில் பிரமாணப் பத்திரத்தை ஏன் தாக்கல் செய்துள்ளார்? ஏனென்றால், இந்த வேட்புமனுவை தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்பதற்காகத்தான்.
பின்னர், தமிழக ஆட்சியாளர்கள் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்து விட்டார் என்று இதனை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று அண்ணாமலை திட்டமிட்டு செய்துள்ளார்.
இதுவரை இந்திய வரலாற்றில், எந்த மாநில தலைவராவது இந்த மாதிரியான வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்களா? இதுதான் ஏமாற்று வேலை. இதுதான் பாஜகவின் வேலை.
எழுத்தறிவு இல்லாத, படிப்பறிவு இல்லாத பாமரன் கூட வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது சரியான முறையில் செய்கிறான்.
ஆனால், அண்ணாமலை என்ன படித்துள்ளார். ஐபிஎஸ் படித்துள்ளதாக சொல்கிறார். அவருக்கு எந்த பிரமாணப் பத்திரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவேண்டும் என்று கூடவா தெரியாது. எல்லாம் பாஜகவின் ஏமாற்று வேலை” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து
’அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு’ : ராகுல் காந்தி வாக்குறுதி!
IPL 2024: சென்னை கேப்டன் ருதுராஜின்… சொத்து மதிப்பு எவ்ளோன்னு பாருங்க!